சிலம்ப விளையாட்டுக்கு அங்கீகாரம் – திருச்சியில் டிசம்பர் மாதம் மாநில அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டி!

0 810
Stalin trichy visit

சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் “விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூற்றில் சிலம்ப விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து சேர்த்துள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் இந்திய, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இயங்கி வரும் சிலம்பக் கோர்வை கழகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்தனர்.

மேலும் இன்று தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சங்கம் சார்பாக தமிழக நிர்வாகிகள் கூட்டம் திருச்சி, தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் தமிழக அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவிகிதம் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சிலம்ப விளையாட்டினை சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சேர்க இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (Sports Authority of India) கோரிக்கை வைத்து கொரோனோ பாதுகாப்புடன் கூடிய மாநில அளவிலான சிலம்ப போட்டி வரும் டிசம்பர் மாதம் நடத்துவது பற்றியும் அனைவரின் ஒருமித்த கருத்துடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் மாத போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியரை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டத்தில் சிலம்ப போட்டி நடத்தி அதில் வெற்றி பெரும் போட்டியாளர்களை திருச்சியில் நடக்க இருக்கும் மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள் எனவும் முடிவெடுக்கபட்டது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.