திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் (சிட்பண்ட்ஸ்) ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அதில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளதோடு மாதாந்திர தவணையில் சீட்டிற்கான பணமும் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தை அதன் உரிமையாளர் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்ததோடு பலமுறை சம்மந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பணம் கட்டியவர்கள் மற்றும் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த சிலரும் இதுதொடர்பாக மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட்டிடம் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து கட்டிய பணத்தை திருப்பித் தரக்கோரி மனு அளித்துள்ளனர்.