முசிறி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பஞ்சமி திதி பூஜை
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம் முசிறி கள்ளர் தெரு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா மாரியம்மன் – வராஹி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெண்கள் வாழை இலையில் பச்சரிசி வைத்து உடைத்த தேங்காயில் நெய் ஊற்றி விளக்கேற்றி வராஹி அம்மனை பூஜை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து வராஹி அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.