பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நிலையம் அமையவுள்ள இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் விதமாக பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர் சிவபாதம், தனியார் பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.