கனடாவில் இருந்து திருச்சி வந்த 3 பேருக்கு கரோனா!

0 347
Stalin trichy visit

 

நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தி யுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங் களில் இருந்து வருபவர்களை மருத்துவத்துறை மீண்டும் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி ராமலிங்க நகரைச் சேர்ந்த 3 பேர் கடந்த 12ம் தேதி கனடாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். மறு நாள் கும்பகோணத்தில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிறகு திருச்சி திரும்பிய அவர்கள், கடந்த 15ம் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். 19ம்தேதி அவர்கள் கரோனா

 

 பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர். பரிசோதனை முடிவில்  3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து மருத்துவத்  அதிகாரிகள் அந்த ஓட்டல் அறையை கிரு மிநாசினி மூலம் சுத்தப்படுத்தினர். பாதிக்கப் பட்ட 3 பேருக்கும் கிருமி தாக்கம் குறைவாக இருப்பதால் ராமலிங்க நகரில் உள்ள உறவினர் வீட்டில் தனி மைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளனர். இதனால் திருச்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.