வைத்தீஸ்வரன் கோயிலில் வருகிற 26, 27ம் தேதிகளின் விரைவு ரயில்கள் நிற்கும்; திருச்சி கோட்ட மேலாளர் உத்தரவு!

0 398
Stalin trichy visit

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2வது செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான நகரத்தார்கள் நடைபயணமாக சென்று வழிபாடு செய்து வருகின்றனர். வழிபாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு பஸ்களில் திரும்பிச் செல்வார்கள். வரும் 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு ரயில் இயக்க தஞ்சை மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் மூல மாக தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வாலை வலியுறுத்தியிருந்தனர். இதுகுறித்து பாஜக வக்கீல் அணி மாநில தலைவர் ராஜேந்திரன், பெரம்பலுார் மாவட்ட பாஜக பொறுப்பாளரும்,

 

ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான இல.கண்ணன் ஆகியோர் கோட்ட மேலாளருக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஏற்றுக் கொண்டுள்ள ரயில்வே நிர்வாகம், நடைபயணம் மேற்கொள்ளும்பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் பனாரஸ்-ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் (வண்டி எண் 22536), சென்னை எழும்பூர்-ராமேஸ் வரம் விரைவு ரயில் (16851) ஆகிய இரு ரயில்களும் 26ம் தேதி மட்டும் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளித்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்துக்கு பனாரஸ் எக்ஸ்பிரஸ் 26ம் தேதி பகல் 1.30 மணிக்கும், ராமேஸ்வரம் போட் மெயில் 27ம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கும் வந்து நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.