சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு

0 479
Stalin trichy visit

துறையூர் தாலுகா ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(55). கட்டிட கூலி தொழிலாளி. இந்தநிலையில் அதே பகுதியில் ஆண்டி என்பவரது வீட்டின் வெளிப்புறத்தில் சாரத்தில் நின்று வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சாமிநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சாமிநாதனின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.