பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கும் கருவி பொருத்த வேண்டும் – அமைச்சரை சந்தித்த எம்.பி ஜோதிமணி!

0 490
Stalin trichy visit

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு தேவைப்படும் 82 வகுப்பறைகள் குறித்த பட்டியலை வழங்கினார்.

அதிக வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் படியும், அரசு பள்ளிகளில் குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் (Vending Machine)& அவற்றை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த எரிக்கும் இயந்திரம் (Incinerator) அமைக்க கேட்டுக்கொண்டார்.

பெண்கள் தங்கள் பள்ளி படிப்பு நாட்களில் 10-20% விழுக்காடு வரை இதனால் இழப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் பெரும்பாலாக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவியர்களுக்கு நாப்கின் உள்ளிட்ட சுகாதார சாதனங்கள் எளிதில் கிடைப்பதில்லைஎன்றும், இதனால் அவர்களின் உடல் நலன் பாதிக்கும் அபாயம் இருப்பதுடன் அவர்களின் கல்வியையும் பாதிக்கிறது. எனவே, அரசு பள்ளிகளில் குறிப்பாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் அவசியத் தேவையாகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.