திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் தாமதம்; பொதுமக்கள் அவதி

0 536
Stalin trichy visit

திருச்சி மாநகர பகுதிகளில் திருவரம்பூர் கோட்டை கோர்ட் கேசவன் ஊர் துறையூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவிற்கு வரும் ஆவணங்கள் அனைத்தும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மின்னணு வகையில் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டு நேற்று மாலை வரை பத்திரப்பதிவு நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று பதிவிற்கு வந்த பத்திரங்கள் அனைத்தும் இன்று பத்திர பதிவிற்கு நேரம் மாற்றி அமைத்து பொதுமக்கள் பத்திர பதிவிற்கு உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய பத்திர பதிவானது 11 மணிக்கு தூங்கியது. இதனால் காலை 10 மணிக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் சுமார் 2 முதல் 3 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் பத்திரப்பதிவினை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தும் தாமதமாகவே நடைபெற்றது. இந்த நிலையில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பத்திரப்பதிவிற்கு வந்த பொதுமக்களிடம் ஊழியர்கள் தரக்குறைவான நிலையில் நடந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி பத்திரங்களை விரைவாக பதிந்து பத்திரங்களை உடனடியாக பொதுமக்களிடம் வழங்கிட பத்திரப்பதிவிற்கு வந்தவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.