கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200 பறித்தவர் கைது

0 266
Stalin trichy visit

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(51). இவர் அரியமங்கலம் லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் காந்திஜி நகரை சேர்ந்த குலாம் தஸ்தகீர்(32) என்பவர் முகம்மது இஸ்மாயிலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து முகமது இஸ்மாயில் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குலாம் தஸ்தகீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.