மாணவி படுகொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி திருவெறும்பூர் நொச்சிவயல்புதூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா லெட்சுமி அவர்களை படுகொலை வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற கோரியும்.
கொலை வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி கொலை குற்றவாளிகளுக்கு துணை போன திருவெறும்பூர் DSp ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது பட்டியல் இன வன்கொடுமை தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர் ம.அய்யப்பன் முன்னிலையில்
வழக்கறிஞர் கோ.சங்கர் தலைமையில்
மணப்பாறை அழகேந்திரன்,
திருவரங்கம் பாவேந்தர்
லால்குடி முருகானந்தம் மற்றும் 100க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.