மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

0 507
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காய்கறி மார்க்கெட் பகுதியில் திருச்சி– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் 6 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறாக

உள்ளதாகக்கூறி இன்று இந்து மக்கள் கட்சியினர் டாஸ்மாக் கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கோரியும், அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படும் மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுத்திடக்கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.