கோவை பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கோவை பள்ளி மாணவி மரணத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் திருச்சி மாவட்ட கிளை சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தென் தமிழக மாநில செயலாளர் செல்வி. சுசீலா தலைமை தாங்கினார்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்வின், தென் தமிழக மாநில செயற்குழு உறுப்பினர் ஹேமா சூரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகர இணை செயலாளர் சந்தோஷ்குமார், போராட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வரன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், மாணவத் தலைவர்கள் பலர் கொட்டும் மழையில் கலந்து கொண்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.