நகைக்கடை-அடகு கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு

0 379
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியம் நகைக்கடை மற்றும் அடகு கடை வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா தொட்டியம் வட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தொட்டியம் வட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் அரங்கராஜன் தலைமை தாங்கினார். பேரமைப்பு மாநில துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

சங்க செயலாளர் மருதைசெட்டியார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த விழாவில் தொட்டியம் நகைக்கடை மற்றும் அடகு கடை சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தலைவர் அரவிந்தன், செயலாளர் காவேரி கனகராஜ், பொருளாளர் பாலசுப்ரமணியன், முன்னாள் தலைவர் சிங்காரம், முன்னாள் பொருளாளர் பெரியசாமி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தொட்டியம் வட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.