மணல் கடத்தல் வழக்கு; பஞ். தலைவர் தலைமறைவு!

0 408
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தம் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக ஐஜி அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது

தனியார் நிலத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சித்தாநத்ததைச் சேர்ந்த கோபால்(வயது 47) என்பவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் சம்பந்தமாக 3 பேர் மீது வழக்குப்பதிந்த மணப்பாறை போலீசார், தலைமறைவான சித்தாநத்தம், ஊராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான ரவிச்சந்திரன், தங்கவேல் மகன் ஜெயபிரகாஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.