நீண்ட நாட்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்த பூக்களின் விலை!

0 349
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுக்கு எட்டரை, கோப்பு, குழுமணி, கல்லூர், சிறுகாம்பூர், சமயபுரம், லால்குடி, செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக பூக்கள் தினந்தோறும் கொண்டுவரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆவணி மாதம் முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக மல்லிகை 700 முதல் 1,500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,600 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பூக்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பூ சந்தையில் இன்று மல்லிகை கிலோ 160 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் 100 முதல் 150 ரூபாய்க்கும், சம்பங்கி 10 ரூபாய், செவ்வந்தி 20 முதல் 30, பன்னீர் ரோஜா 20, தாமரை ஒரு ரூபாய் என தற்போது பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.