திருச்சி மாநகரில் தா.பாண்டியன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

0 254
Stalin trichy visit

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்ExMP முதலாம் ஆண்டு நினைவு நாள் பிப்ரவரி 26ல் அனுசரிக்கப்படுவதையொட்டி திருச்சி மாநகர் உறையூரில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 23வது வார்டு பகுதியில் வை.புஷ்பம்ExMC தலைமையில் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா மாவட்டக்குழு உறுப்பினர்கள் சத்யா, ஆயிஷா, இப்ராஹிம், சூர்யா வார்டு செயலாளர்கள் முருகன்,

சுரேஷ் முத்துசாமி, ஆனந்தன், நாகராஜன் ஏஐடியுசி ஆட்டோ சங்க நிர்வாகிகள் ராஜா, ரமேஷ் திமுக வட்ட பிரதிநிதி பாண்டித்தேவர் காங்கிரஸ் விசுவநாதன் தொலைத்தொடர்பு தொழிற்சங்கம் அதிகாரிகள் சங்கம் காமராஜ் மாணவர் பெருமன்றம் ஆனந்த், பாட்ஷா மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்று அலங்கரிக்கப்பட்ட தா.பாண்டியன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாவட்ட அலுவலகத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் தலைமையில் ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட தலைவர் நடராஜா முன்னிலையிலும் பகுதி செயலாளர்கள் பிரான்சிஸ், செல்வகுமார் அலுவலக செயலாளர் அன்பழகன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட பெரும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி மாநகர் 9வது வார்டில் செயலாளர் ஆனந்தன் தலைமையிலும் 10வது வார்டில் மாவட்ட குழு உறுப்பினர் ஆயிஷா தலைமையில் நடைபெற்றது திமுக மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் பங்கேற்றார். 11 வது வார்டில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சிவா தலைமையிலும், 22வது வார்டு செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமையிலும் இருபத்தி நான்காவது வார்டில் செயலாளர் துரைராஜ் தலைமையிலும் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.