700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்க தி.மு.க அரசு எடுத்த முடிவு ஆபத்தான முடிவு – திருச்சியில் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி ரவி!

0 593
Stalin trichy visit

திருச்சி ஏர்போர்ட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்று வரும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பொறுப்பாளர் சி.டி ரவி செய்தியாளர்களை சந்தித்தார் – இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா,சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் சி.டி ரவி பேசுகையில்….கடந்த 20 ஆண்டுகளில் மோடி அவர்களின் மீது ஒரு லஞ்ச புகார்கள் கூட இல்லை – சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் – நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வருகிறார். திமுகவின் honey moon நிகழ்வு முடிந்து விட்டது போல் – அவர்களின் என்ன ஓட்டம் எப்போதும் மத்திய அரசுக்கு எதிராகவே உள்ளது. எத்தனையோ நல்ல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளது – எப்போதுமே மத்திய அரசுக்கும்,மோடி அவர்களுக்கும் எதிரான மன நிலையில் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் பி.ஜே.பி 100% நாங்கள் தமிழக மக்களோடு இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது – திமுக அரசாங்கம் இதை மறைக்க முயற்சி செய்கிறது. தமிழ் எதிர்ப்பாளர்களாக,
மத்திய அரசிற்கு எதிர்பாளராக இவர்கள் உள்ளனர். ஒரே எதிர் மன நிலையில் உள்ளனர் திமுகவினர்,நீட் தேர்வை பொறுத்த வரை கிராமபுற மாணவர்கள் 2020ல் அதிகமாக தேர்ச்சி பெற்றனர் – குறை கூறும் மன நிலையில்,எப்போதும் எதிர்க்கும் மன நிலையில் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் – தொடர்ந்து எங்களது கட்சியை வலுப்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து திமுக பாஜக தலைமை முடிவு செய்யும். 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்க தி.மு.க அரசு எடுத்த முடிவு ஆபத்தான முடிவு,அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஆபத்து.

நீட் மசோதாவிற்கு பா.ஜ.க ஆதரவளிக்காமல் வெளிநடப்பு செய்தது தொடர்பான கேள்விக்கு அ.தி.மு.க வும்,பா.ம.க வும் தனி தனி கட்சிகள் நாங்கள் தனி கட்சி அவர்களோடு கூட்டணியில் இருக்கிறோம்.தமிழ் மக்களுடன் நாங்கள் எப்பொழுதும் இருப்போம் என மழுப்பலாக பதில் அளித்தார். சீனாவின் அத்துமீறல் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு…1962ல் உள்ள இந்தியா இல்லை, 2021ல் இந்தியா உள்ளது. இந்தியா தனியாக இல்லை, பல நாடுகளுடன் நட்புறவுடன் உள்ளது, இந்தியா எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.