வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் 374 மனுக்கள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

0 640
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் வாட்ஸ்அப் செய்தி மற்றும் மனு பெட்டி மூலம் 374 மனுக்கள் பெறப்பட்டது.

இலவச வீட்டு மனை பட்டா, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ்கள் இதர சான்றிதழ்கள் மற்றும் நிலம் தொடர்பான 65 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 12 மற்றும் முதியோர் உதவித்தொகை விபத்து நிவாரணத் தொகை மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 67 மனுக்களும், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புக் குழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 19 மனுக்களும் புகார் தொடர்பாக 18 மற்றும் கல்வி உதவித் தொகையை வங்கிக் கடன் மற்றும் இதர வசதிகள்கோரி 20 மற்றும் திருமண உதவித்தொகை இலவச தையல் இயந்திரம் இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் சலவை பெட்டி தொடர்பாக 28 மனுக்களும் என மொத்தமாக 374 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.