திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பெரகம்பி கிராமத்தில் பெரகம்பி முதல் எதுமலை வரையிலான வனச்சாலை நான்கு வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனை சரிசெய்து தர கோரி பல முறை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் தனிபிரிவிற்கு மனு கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.