தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி அண்ணா சிலை முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிந்தாமணிபகுதி செயலாளர் முகேஷ் கண்ணா தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ், இரட்டமலை, சூர்யா, மகேஷ் குமார், சூரஜ், சந்தோஷ், சபரி, விஷ்ணு மற்றும் பலர் பங்கேற்றனர்.

மேலும் டெடஸ் கோப்பை தூக்கு கயிறில் மாட்டி நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.