மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி!
திருச்சி திருவானைக்காவல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் சரத்(வயது 24). கூலி வேலை செய்து வந்தார். இவர் துறையூர்-பெரம்பலூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்கு மணவறை அலங்காரம் செய்வதற்காக சரக்கு வாகனத்தில் 20 பேர் கொண்ட பணியாளர் குழுவி னரோடு சென்றார். அப்போது 20 அடி நீள முள்ள இரும்பு குழாய் ஒன்றை சரத்தூக்கிச் சென்றபோது,
மண்டபத்தின் முன்புறம் உள்ள உயரழுத்த மின்கம்பியில் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட சரத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றன.