பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1டோல்கேட் உள்ள சேலம் பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
விருதுநகர் மாவட்டம் சூளைக்கரைமேடு, நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி 62 வயதான விஜயலட்சுமி.இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு பின்னர் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பேருந்தில் வந்துள்ளார். அப்போது நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள சேலம் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்க செயினை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.