மாணவர்களின் நலன் கருதி பேருந்து சேவை நீடிப்பு; கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரை செல்லும் நத்தம் வரை செல்லும் நகர பேருந்தினை பள்ளி மாணவர்களின் நலன் கருதி வடகம்பட்டியிலிருந்து வலையப்பட்டி வழித்தட இடை நீட்டிப்பு செய்தும்,

அதேபோல மணப்பாறையில் இருந்து அய்யலூர் வரை செல்லும் நகரப் பேருந்தினை பொன்னம்பல பெட்டியிலிருந்து துலுக்கம்பட்டி வரை வழித்தட இடை நீட்டிப்பு செய்தும்,
நகரப்பேருந்து இயக்கத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமீது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.