எம்.ஐ.டி. வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இயற்கை விவசாய செய்முறை பயிற்சி – கண்காட்சி

0 369
Stalin trichy visit

உப்பிலியாபுரம் அடுத்த முருங்கப்பட்டியில் தழுகை இயற்கை விவசாய குழு மற்றும் எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய இயற்கை விவசாய செய்முறை பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் திரு.மணிவாசகம் , இயற்கை விவசாய மற்றும் ஆய்வாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் இயற்கை வழி விவசாயத்தின் சிறப்புகள் மற்றும் தற்சார்பு முறை இயற்கை விவசாயத்தின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அவர் எண்ணெய் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்களை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் பூச்சியியல் துறை இணை பேராசிரியை முனைவர் மு.தேவி அவர்கள் தேனீ வளர்ப்பு பற்றிய சிறப்புரை மற்றும் தேனீ வளர்ப்பு பயிற்சி ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கினார். இவ்விழாவில் தழுகை இயற்கை விவசாய குழு தலைவர் சரவணன் செயலாளர் கந்தசாமி பொருளாளர்கள் நவீன் , தியாகராஜா ,மற்ற குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கோகுல், கோகுல்ராஜூ,கௌதம், ஹரிகிருஷ்ணன், ஹரிஹரன்,கல்யாண் மற்றும் கண்ணப்பன் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் எம்.ஐ.டி. வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இயற்கை விவசாய கண்காட்சி நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.