ரயிலிலிருந்து தவறி விழுந்து வெளிமாநில இளைஞர் உயிரிழப்பு

0 225
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி ரயில்வே நிலையம் அருகில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ஆந்திர வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

நேற்றிரவு மங்களூரில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த பெயர் விலாசம் தெரியாத வாலிபர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் படிக்கட்டில் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லால்குடி ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயிலில் இருந்து எதிர்பாராதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த வாலிபரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஆந்திராவில் உள்ள அவர்களது உறவினருக்கு விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் வந்த பிறகு வாலிபரின் பெயர் விலாசம் தெரிய வரும் என ஙிருத்தாசலம் ரயில்வே போலீசார் கூறினார். இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.