வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூலை 15 வியட்நாமில் உயிர் இழந்த அழகு ராஜன், ஷேக் அப்துல்லா, பாலாஜி ஆகிய மூவரின் உடல் திருச்சிக்கு அவரவர் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டது. கிராப்பட்டியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அழகு ராஜன் உடலுக்கு கழக முதன்மைச் செயலாளர் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் கே. என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் பொருளாளர் துரைராஜ் உட்பட பலர் உடன் சென்றனர்