இலவச மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் முசிறி அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது. முகாமில் டாக்டர்கள் ஜமுனாபிரியா, சுதர்சன், செந்தில்குமார், விசாலாட்சி, விக்னேஷ்
ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து குறைகள் கண்டறிந்து, மேல் சிகிச்சை பெற ஆலோசனையும் அடையாள அட்டை வழங்க பரிந்துரையும் செய்தனர். முகாமில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.