மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி வகுப்பு!
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்(SSC) 3216 காலி பணியிடங்களுக்கு கடந்த 24 ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் இணைய வழியில் (www.ssc.nic.in) வருகின்ற 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இப்போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் வருகின்ற 7ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலையை நாடுபவர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் வழிகாட்டு மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.