திருச்சி சித்த மருத்துவமனையில் இலவச யோகா பயிற்சி – செப்டம்பர் 1 முதல் தொடக்கம்!

0 562
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனை வளாகத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியானது காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இலவச யோகா பயிற்சியில் யோகாசனங்கள் பிரயாணம், மூச்சுப் பயிற்சி, உடலையும் மனதையும் தளர்த்தும் பயிற்சிகள், கண் பயிற்சிகள் போன்றவை கற்றுத் தரப்படும். இந்த இலவச யோகா பயிற்சிக்கு10 நிமிடம் முன்னதாகவே வரவேண்டும். உணவு மற்றும் மருந்து உட்கொள்வோர் முன்னதாகவே உணவருந்தி மருந்துகளை உட்கொண்டு யோகா செய்வதற்கு ஏற்றவாறு உடை அணிந்து வரவேண்டும். இலவச யோகா பயிற்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை நடைபெறும். பொது மக்கள் இந்த யோகா பயிற்சிக்கு வரும் போது அனைவரும் ஓ.பி சீட்டு பெற்றுக்கொண்டு இந்த யோகா பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.