பிளஸ்-1 மாணவி மாயம்!
திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் விஜய ராஜன். இவரது மகள் சிவசக்தி(வயது 17). பிளஸ் 1 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும்வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜயராஜன் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.