வக்கீல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் செட்டியார். இவருடைய உறவினர் சிவராஜன் 2 பேரும் நேற்றுமுன்தினம் திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலம் முன்பு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் நிலத்தை திருப்பி தராத நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்க முயன்ற தாகக் கூறினார்.
அவர்கள் இருவரையும் போலீசார் கே.கே நகர் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில் ஊத்துங்க தலைவா என ஐடியா கொடுக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பதிவை வெளியிட்ட நபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், நெய்க்குப்பை பகுதியை சேர்ந்த ஜெயவர்த்தன் (வயது 35) என்ற வழக்கறிஞர் அவர்களை அழைத்து வந்து தற்கொலை நாடகம் நடத்திய தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வக்கீல் மீது தற்கொலைக்கு தூண்டுதல், எளிதில் தீப்பற்றக் கூடியதை பொது இடத்தில் எடுத்து வருதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.