வந்தலைகூடலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

0 304
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வந்தலை கூடலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் துவக்கி வைத்தார் .

குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது. இந்நிலையில் தற்போது சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் துவக்கி வைத்தார்.

புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி ராமச்சந்திரன், மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.