மாதரே விருது பெற்ற சுகித்தாவுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பாராட்டு

0 421
Stalin trichy visit

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி சார்பில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் விதமாக “மாதரே” என்ற பெயரில் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி விருது வழங்கும் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பெண்களை ஊக்குவிக்கவும், பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் தலைமை, துணிவு, சாதனை, திறமை, புலமை மற்றும் கருணை ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வின் முக்கிய குறிக்கோள், பெண்கள் சாதனையாளர்களை அடையாளம் கண்டு, அந்தந்த துறைகளில் முன்மாதிரியாக இருப்பவர்கள் மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிப்பதோடு எதிர்கால சந்ததியினரை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் அடுத்த படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர். மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். முதல்வர் காசிநாத பாண்டியன், டீன் சுப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மது சரண்வேல் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் நடிகை லிஜோ மோல், புத்தக உரையாசிரியர் ஆனந்தி, பின்னணிப் பாடகி மாளவிகா சுந்தர், துணை நடிகை வினோதினி சின்னத்திரை நகைச்சுவை நடிகை சுனிதா கோகை, கார் பந்தய வீராங்கனை ஸ்ரேயா லோகியா, வியாபாரத் துறை வல்லுநர் மினு அகர்வால், உணவு வல்லுனர் ஷர்மிளா , நடிகை கார்த்திகா, சமூக சேவகி சித்ரா தேவி, கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவியும் தொழில திபருமான பார்வதி ஆனந்த் மற்றும் திருச்சி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் சர்வதேச, தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சமூக சேவைகளில் சிறப்புடன் விளங்கும் மோ.பி.சுகித்தா அவர்களுக்கும் சிறந்த இளம் திறமையாளர் என பாராட்டி கேடயம் வழங்கப்பட்டதை அடுத்து திருச்சி திரும்பிய சுகித்தாவை திருச்சியின் முதன்மை கல்வி அலுவலர் ர.பாலமுரளி அவர்கள் இந்த இளம் வயதில் திருச்சிக்கு பல்வேறு வகையில் பெருமை சேர்த்து வருகின்றீர்கள் வாழ்த்துக்கள் என பாராட்டினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.