திருச்சி என்.ஐ.டி.யில் பரம்பொருள் மையம் திறப்பு

0 502
Stalin trichy visit

இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்எஸ்எம்) ஒரு பகுதியாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சிராப்பள்ளி, இடம்பெற்றுள்ளது . பரம் பொருள் (PARAM PORUL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தை, NIT திருச்சியின் நிர்வாகக் குழுவின் தலைவர் ஸ்ரீ பாஸ்கர் பட், NIT திருச்சியின் இயக்குநர் Dr. G. அகிலா முன்னிலையில் திறந்து வைத்தார்.

திருமதி சுனிதா வர்மா, குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் , NSM, MeitY, Dr. நம்ரதா பாதக் , விஞ்ஞானி, DST, ஸ்ரீ E. மகேஷ், டைரக்டர் ஜெனரல், CDAC, திரு. நவின் குமார், விஞ்ஞானி D, MeitY, திரு. S. A. குமார், ஆலோசகர், MeitY , டாக்டர். நாகபூபதி மோகன், விஞ்ஞானி, DST, டாக்டர். ஹேமந்த் தர்பாரி, மிஷன் இயக்குனர், NSM, ஸ்ரீ சஞ்சய் வந்தேகர், மூத்த இயக்குனர், CDAC, புனே, டாக்டர். நாகபூபதி மோகன், விஞ்ஞானி, DST, ஸ்ரீ பிரசாத், CDAC, ஸ்ரீ முகமத் சஜித் CDAC,
ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். PARAM PORUL சூப்பர் கம்ப்யூட்டர் மையம் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள அணைத்து NITகளில், NIT திருச்சிராப்பள்ளி மட்டுமே NSMஇல், அமைக்க பெற்றது பெருமைக்குரிய அம்சமாகும். இது தவிர NSMஇல் 9 IIT கள் மற்றும் NABI இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உயர் செயல்திறன் கணினி இயந்திரங்கள் அமைத்து, ஆராய்ச்சி மற்றும் அதிக கணினி பயன்பாடு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு அளிப்பதே NSMன் முக்கிய நோக்காகும்

. தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி, NSM – உள்கட்டமைப்பு குழுவிடம் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeITY) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை (DST) ஆகியவற்றால் ரூ.19 கோடி மதிப்பிலான சூப்பர் கம்ப்யூட்டர் NIT திருச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

70:30 என்ற விகிதத்தில் CPU மற்றும் GPU ஐ உள்ளடக்கிய 650 TF சூப்பர் கம்ப்யூட்டர், புனேவிலுள்ள CDAC ஆல், 4 கோடி கூடுதல் செலவில், நிறுவப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல் உள்ளிட்ட சமூக திட்டங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூப்பர் கம்ப்யூட்டருக்கான நிறுவல் உரிய நேரத்தில் அமைந்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. பல்வேறு ஆராய்ச்சி மற்றும் உதவி ஆராய்ச்சி செய்யப்பட்ட திட்டங்களை மேற்கொள்வதற்காக உயர்நிலை கணினி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரியும் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.

திருச்சி என்ஐடி ஆசிரியர்களுக்கு சேவை செய்வதில் இந்த வசதி ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று தலைவர் ஸ்ரீ பாஸ்கர் பட் தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் இதன் மூலம் பயனடையும். இதனால் NEP 2020 அறிவுறுத்திய வழியில் NIT திருச்சியின் இந்த வசதி அமைந்து இருப்பதாக ஸ்ரீ பாஸ்கர் பட் மேலும் தெரிவித்தார். இயக்குனர் டாக்டர் ஜி. அகிலா பரம் பொருள் மையத்தின் திறப்பு விழாவில் தனது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். சூப்பர் கம்ப்யூட்டர் வசதியானது, ஆராய்ச்சி வெளியீடு மற்றும் சமூகத் திட்டங்களான, சுகாதாரம், விவசாயம், வானிலை, நிதிச் சேவைகள், சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றும், நிறுவனத்தின் அனைத்து 17 துறைகளின் உள் திட்டங்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் வசதி அதிகரிக்கும் என்றும் கூறினார். NSM இல் குறிப்பிடப்பட்ட மற்றும் NEP 2020 க்கு இணங்க, சூப்பர் கம்ப்யூட்டிங் வசதி அருகிலுள்ள கல்வி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.