டாஸ்மாக் முற்றுகைபோராட்டம் நிறுத்திவைப்பு

0 371
Stalin trichy visit

திருச்சி மாநகர் கோ-அபிஷேகபுரம் மண்டல் உறையூர் கடைவீதி பிரதான சாலையில் மூன்று மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் செல்லும் போது மதுபிரியர்கள் கேலி, கிண்டல் செய்வதும். அரைநிர்வாணத்துடன் நடனம் ஆடுவதுடன் பொதுமக்களை தொந்தரவு செய்வதும், பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களை வழிமறித்து தகராறு செய்வது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுவதை கண்டித்து இந்துமுன்னணி திருச்சி மாவட்ட பேரியக்கத்தின் சார்பில் மதுபானக் கடையை முற்றுகை போராட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்டிஓ மற்றும் அரசு அதிகாரிகள் இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி மூன்று மதுபான கடைகளில் ஒரு மதுபான கடையை மட்டும் இப்போது அகற்றிவிட்டு, மூன்று மாதத்திற்குள் மற்ற மதுபான கடைகளையும் குறைக்கவும் மற்றும் புதிய மதுபான கடை ஏதும் வாராது என்று அரசு அதிகாரிகள் உறுதி அளித்த தன் காரணமாக ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் டாஸ்மாக் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.