மணப்பாறை ரோட்டரி சங்கம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலிமலை சாலையில் உள்ள ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி ஹாலில் சங்க தலைவர் Rtn.மகேஷ் தலைமையில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சங்க தலைவரால் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ஆல்மைடிஸ் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மணப்பாறை சங்கத்தின் இன்டராக்ட் பள்ளி மாண்போர்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாவட்ட துணை ஆளுநர் Rtn CM ஜோசப், மாவட்ட இணை செயலாளர் Rtn கார்த்திகேயன், முன்னாள் துணை ஆளுநர் Rtn முகமது ஹனிபா, துணை ஆளுநர் தேர்வு Rtn N M கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர் Rtn ஜான்போஸ்கோ, செயலர் Rtn ராமன், முன்னாள் செயலாளர் Rtn செல்வம், Rtn Er கண்ணன், குயின்ஸ் ரோட்டரி சங்க தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA