ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றி கொண்ட கடை உரிமையாளர்கள்
நீதிமன்ற வளாகத்தின் முன் புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய கடை உரிமையாளர்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள் புகார் தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன், வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையானது நீதிமன்றத்திற்கு வெளியே தற்காலிகமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா முடிந்தும் அந்த கீற்றுக் கொட்டகை அகற்றப்படாமல் நீதிமன்றத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் முன்புறம் உள்ள பத்திரம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனை செய்யும் நிலையங்கள் செயல்படுவதாக கூறி திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர்
அதனைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பாக நீதிமன்றம் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உத்தரவு பிரிக்கப்பட்டது
அதனை தொடர்ந்து மாநகர அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் முன்புறமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கூறினர் தொடர்ந்து உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்