பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

0 260
Stalin trichy visit

.ருச்சி, ஜூலை 15 திருச்சி மாட்டம் சிறுகனூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி  உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் அருகே இரூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகன் வீரபாண்டி (வயது 30). கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், எடமலைப் பட்டி புதூரை சேர்ந்த ஒரு பெண்ணிற்க்கும் திருமணம் நடைபெற்றது. வீரபாண்டி ஜெனிபரை எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தனது மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் பைக்கில் இரூருக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது சிறுகனூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது தென் காசியில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றிச்சென்ற லாரி, மோட்டார் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார். விபத்தைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரபாண்டியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.