“பட்டா கத்தியை காட்டி ரூ.2 லட்சம் வழிப்பறி” தின்பண்டங்களையும் பிடிங்கிச்சென்ற அவலம்!

0 538
Stalin trichy visit

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் பக்ருதீன். திருச்செந்தூர் சென்று கார் விற்ற ரூ.2 லட்சத்துடன் திருச்சிக்கு பஸ்சில் வந்த அவர், திருச்சி மன்னார்புரம் பகுதியில் இறங்கி நடந்து வந்துள்ளார். அப்பொழுது காஜாநகர்

 

நீதிபதி குடியிருப்பு முன் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை பட்டா கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.2 லட்சம், ஏ.டி.எம். கார்டு மற்றும் ரம்ஜானுக்கு வாங்கிய தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை பறித்து சென்றனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.