சிறந்த கற்போர் மையங்களின் தலைமையாசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கு எழுத்தறிவு விருது; அமைச்சர்கள் வழங்கினர்!

0 494
Stalin trichy visit

திருச்சி காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளி வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் சார்பில் இன்று (1.12.2021) நடைபெற்ற விழாவில், சிறந்த கற்போர் மையங்களின் தலைமையாசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாநில எழுத்தறிவு விருதினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, பள்ளி சாரா வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பெ.குப்புசாமி, இணை இயக்குநர் செ.அமுதவல்லி, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி மற்றும் பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.