திருச்சி மாவட்டம், துறையூர்-திருச்சி சாலை பகுதியில் போக்குவரத்து போலீசார் துறையூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் வடமலை தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் போதை ஆசாமிகள் இருவர் வருவதை பார்த்த சார்பு ஆய்வாளர் வடமலை அவர்களது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த போதை ஆசாமி வாகனத்திலிருந்து கீழே இறங்கி போக்குவரத்து சார்பு ஆய்வாளர் வடமலையை ஓங்கி அரைந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்த போக்குவரத்து காவலர்கள் அவரை அருகிலிருந்த கடை வாசலில் அமர வைத்தனர். விசாரணையில், போலீஸ்காரரை அறைந்தவர் துறையூர் கிழக்கு தெப்பக்குள தெருவை சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.