வீட்டில் படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

0 334
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள செங்காட்டு பட்டியில் வசித்து வருபவர் தமிழரசி(வயது 31). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இவரது கணவர் வெளியூரில் தனியார் கம்பெனியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனது இரு குழந்தைகளுடன் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் கதவை யாரோ தட்டுவது போல் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு கதவை திறந்தவுடன் அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன்(வயது 36) என்பவர் தனியாக இருந்த தமிழரசியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தமிழரசி அவரை கீழே தள்ளி விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார் அதன்பின்பு அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை பிடித்து துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகருக்கு தகவல் கொடுத்தார்கள் தகவலறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரனை வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.