காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

காட்டுப்புத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறது. இந்த வழிபாட்டில் ஸ்ரீ மகா மாரியம்மன் திருஉருவ சிலையினை அலங்கார ஊர்தி வாகனத்தில் வைத்து நகரின் முக்கிய விதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் எடுத்து சென்று கோவிலுக்கு சென்றனர். இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீ மகாமாரியம்மன்,
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளிகாம்பாள், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ வீரபத்திரர் சுவாமிகளுக்கு அபிஷேகம் ஆராதனை நடத்தினர். இந்த நிகழ்வில் காட்டுப்புத்தூர் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.விழாவில் பங்கேற்ற அணைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுப்புத்தூர் நகர பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.