மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி கோவிலில் இன்று இரவு தேரோட்டம்

0 362
Stalin trichy visit

திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோட்டில் ஸ்ரீராஜகணபதி, மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவிலின் 45-ம் ஆண்டு திருவிழா, தேரோட்டம் மற்றும் குட்டி குடித்தல் திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவாக இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோவில் தேரோட்டம் நடக்கிறது.

நாளை (புதன்கிழமை) மாவிளக்கு பூஜையும், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை)   காலை 10 மணிக்கு ஒத்தக்கடை மந்தையில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 25-ந் தேதி மதியம் 12.05 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. வருகிற 26-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் பூ விடும் விழா, விடையாற்றி பூஜை நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.