பெயிண்டரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

0 414
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 36). பெயிண்டரான இவர் மேல கல்கண்டார் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் தமிழரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அவர் கூச்சலிடவே அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தமிழரசன் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பொன்மலை தங்கேஸ்வரி நகரை சேர்ந்த பரதன்(வயது 25), பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்த பிரேம்குமார்(வயது 38), மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த தங்கசாமி(வயது 43), பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (33) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.