மக்களை தேடி மருத்துவ முகாம்…

0 291
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

லால்குடி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம், மற்றும் புள்ளம்பாடி வட்டார அரசு மருத்துவக் குழு இணைந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் வழிக்காட்டுளுடன், துணை முதல்வர் முனைவர்.அசோக்குமார்பெருவளப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் மருத்துவர் பிரகாஷ் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் சர்க்கரை பரிசோதனை, பிரஷர் பரிசோதனை ஹீமோகுளோபின் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.இதில்
650 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொன்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நலப் பணிதிட்ட அலுவலர் சக்திவேல் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் திருமதி சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர் . இந்த முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பெருவளப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்,செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.