வீடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான கட்டுமான நிறுவனங்களுடான சந்திப்பு நிகழ்ச்சி

0 325
Stalin trichy visit

திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக வீடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான கட்டுமான நிறுவனங்களுடான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வீட்டு கடன் தொடர்பான சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த கட்டுமானத் துறையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் அமித் வர்மா தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசுகையில் இந்திய பொருளாதாரம் தொற்று நோய்களில் இருந்து வெளியேறி வருகின்ற நிலையில் வீட்டுக் கடன்களுக்கான தேவை வளர்ந்து வரும் நகரங்களில் அதிகரித்து வருகின்றது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உதவிப் பொது மேலாளர் ரவிக்குமார் பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு சலுகைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை விரிவாக விளக்கிப் பேசினார்.

பின்னர் பில்டர்ஸ் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்து முன்னணி வங்கியாக இருக்க முயற்சி செய்யும் என்று திருச்சி மண்டல உதவி பொது மேலாளர் சிவக்குமார் உறுதி அளித்தார். கிரெடாய் உறுப்பினர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.