ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பால் -பிஸ்கட் வழங்கல்
திருச்சி, செப். 20 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோயில் சார்பாக உபயதாரர் வேதாபால் உரிமையாளர் ரமேஷ் உதவியுடன் பக்தர்களுக்கு சூடான பசும்பால் மற்றும் பிஸ்கெட் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் வழங்கப்பட்டது உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்துறை கண்காணிப்பாளர்கள் வேல்முருன், பரந்தாம கண்ணன் அர்ச்சகர் பயிற்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் புலவர் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பால், பிஸ்கட் வழங்கப்படும்.