பல லட்சம் ரூபாய் செம்மரம் நள்ளிரவில் வெட்டிக்கடத்தல்!

0 347
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் அன்பு என்ற நேரு (வயது 66). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தா.கவுண்டம்பட்டியில் உள்ளது. தோட்டத்தின் ஒரு பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக செம்மரம் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தோட்டத்திற்கு சென்று தோட்ட வேலைகளை பார்த்து விட்டு நேரு மீண்டும் வீட்டிற்கு சென்று விடுவார். இதேபோல் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது சுமார் 36 இன்ச் சுற்றளவு கொண்ட 50 அடி உயரமுள்ள

செம்மரம் வெட்டி கடத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்பகுதியை மரஅறுவை இயந்திரம் மூலம் வெட்டப்பட்டிருந்த நிலையில் மேல் பகுதி மட்டும் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பல லட்சம் மதிப்புள்ள செம்மரம் ஒன்று வெட்டி கடத்தப்பட்டிருப்பதை அறிந்து உடனே துவரங்குறிச்சி போலீசார் மற்றும் வனத்துறை, மருங்காபுரி வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் செம்மரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள செம்மரம் ஒன்று வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.